HBD GV Prakash : கடந்த காலத்திற்கு அழைத்து செல்லும் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷின் பிறந்தநாள் இன்று!
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஜி.வி.பிரகாஷ் குமார். அவரது தாய் மாமாவான ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஜெண்டில்மேண்ட் படத்தில் இடம்பெற்ற சிக்கு புக்கு ரயிலே பாடல் மூலம் பாடகராக அறிமுகமானார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான அந்நியன் படத்தில் வரும் காதல் யானை பாடலையும் உன்னாலே உன்னாலே படத்தில் வரும் ஹெலோ மிஸ் இம்சையே பாடலையும் பாடினார்.
வெயில் படத்திற்கு இசையமைத்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். தொடர்ந்து ஆனந்த தாண்டவம், அங்காடி தெரு, ஆயிரத்தில் ஒருவன், மதராசபட்டினம், ஆடுகளம், தெய்வத்திருமகள், மயக்கம் என்ன, சகுனி, பரதேசி, தலைவா, ராஜா ராணி, தெறி, மீண்டும் ஒரு காதல் கதை, அசுரன், சூரரைப் போற்று, வாத்தி ஆகிய ஹிட் ஆல்பங்களை கொடுத்தார்.
நகைச்சுவை நடிகர்கள் பலரும் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த ட்ரெண்ட் வந்த போது, இசையமைத்து கொண்டிருந்த இவர் நடிக்க தொடங்கினார். இவரின் இசையை ரசித்தவர்கள் பலரும், “ஜி.வி படம் நடிக்காமல், இசையமைப்பாளராகவே இருந்திருக்கலாம்” என சொல்வதுண்டு.
பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு அன்வி என்ற பெண் குழந்தை உள்ளார்.
இன்றளவும் பலரை புல்லரிக்க வைக்கும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பின்னணி இசையை அமைத்த ஜி.வி பிரகாஷிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -