பள்ளி படிப்பை கூட முடிக்காத நடிகையின் மறுபக்கம்; இன்று ரூ.550 கோடிக்கு அதிபதி! யார் தெரியுமா?
சினிமாவில் நடிகர், நடிகைகளின் குழந்தைகள் இளம் நடிகர், நடிகர்களாக, இயகுநர்களாக வலம் வந்து கொண்டுக்கின்றனர். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமா உலகிலும், பிரபலங்களின் வாரிசுகளுக்கு திரையுலகில் சிவப்பு கம்பள வரவேற்பு கிடைக்கிறது.
தென்னிந்திய திரையுலகில் வாரிசாக இருந்தாலும் திறமை இருந்தால் மட்டுமே இடம் கிடைக்கும். ஆனால் பாலிவுட் வாரிசு பிரபலங்களை மட்டுமே தொடர்ந்து வளர்த்து வருவதாக ஒரு விமர்சனமும் உண்டு.
இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கும் பாலிவுட் நடிகை தான் ஆலியா பட். இவர், பிரபல இயக்குநர் மகேஷ் பட்டின் மகள். Sangharsh படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஆலியா பட் இயக்குநர் கரண் ஜோகர் இயக்கத்தில் வந்த Student of the Year படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார்.
இந்தப் படத்திற்கு பிறகு ஹைவே, 2 ஸ்டேட்ஸ், அக்லி, ஹோகிங் ஹோம் என்று பல படங்களில் நடித்து பல விருதுகளையும் வென்றுள்ளார். அப்படிபட்ட ஆலியா பட் 12ஆம் வகுப்பு கூட முடிக்கவில்லை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், நம்பித்தான் ஆக வேண்டும். அதுதான் உண்மை. பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு நடிப்பு துறையில் களமிறங்கினார்.
அழகான தோற்றம், சிறப்பான நடிப்பு ஆகியவற்றின் மூலமாக சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்று நடித்து இன்று பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சினிமாவில் பிஸியாக இருக்கும் போதே பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்டார். தற்போது ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூருக்கு ராஹா கபூர் என்ற பெண் குழந்தை இருக்கிறது.
சினிமாவில பல விருதுகளை வென்றுள்ள ஆலியா பட் அதிக சம்பளம் வாங்கும் பாலிவுட் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். நடிப்பைத் தாண்டி தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.
சினிமா மூலமாக மட்டுமின்றி விளம்பரங்கள், பிஸினஸ் மூலமாக அதிக வருமானம் பெற்று வரும் ஆலியா பட் அடுக்குமாடி குடியிருப்புகள், விலையுயர்ந்த வீடுகள் வைத்திருக்கிறார். 2025 பிப்ரவரி கணக்கின்படி ஆலியா பட்டின் நிகர சொத்து மதிப்பு மட்டும் ரூ.550 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், ஆலியா பட் 12ஆம் வகுப்பை கூட முடிக்கவில்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.