Jayakandhan : எழுத்துலக இமயம் ஜெயகாந்தனின் ஆழமான அழுத்தமான வரிகள்!
ABP NADU | 24 Apr 2023 05:22 PM (IST)
1
தமிழ் எழுத்துலகின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவர் ஜெயகாந்தன், அவரது பிறந்தநாளையொட்டி அவர் எழுதிய சில அற்புதமான வரிகளை இங்கு காண்போம்.
2
நான் ஒரு போதும் எதையும் அவமானமாக கருதியதில்லை. ஏனென்றால், வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம்.
3
சரி, தவறு என்பதெல்லாம் அவரவர் வாழும் சூழ்நிலையும் வளர்ந்தவிதமும் கற்பிக்கப்பட்ட ஒழுக்கமும் உருவாக்கியவை. உங்கள் சரி, எனக்கு தவறு!
4
ஒழுக்கமென்பது ஆண்-பெண் உறவு சம்மந்தப்பட்டது மட்டுமே என்று நினைப்பது ரொம்பக் கொச்சையான தீர்ப்பு.
5
நீங்கள் அழகு என்றால் என்ன நினைக்கிறீர்களோ தெரியாது, யாரைப் பற்றி நினைத்தால் மனதிற்கு இன்பமாக இருக்குமோ அவர்கள் எல்லாம் அழகானவர்கள்.
6
ஆதிக்கம் தான் எதிரியே தவிர யாருடைய ஆதிக்கம் என்பது பொருட்டல்ல. ஆதிக்கத்தை எதிர்ப்பதன் மூலம் தான் ஜனநாயகத் தன்மை வளரும்.