Sridevi Doodle : நடிகை ஸ்ரீதேவியின் 60 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் கூகுல்!
அறிவியல், இயற்கை, சினிமா, தொழில்நுட்பம், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த ஆளுமைகள், முக்கியமான தினங்கள் வரும் நாட்களில் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுள் வெளியிட்டு அவர்களின் பங்களிப்பை கொண்டாடும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை ஸ்ரீதேவி 1963- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் நாள் பிறந்தார்.
சிறுவயது முதலே நடிப்பின்மீது ஆர்வம் கொண்ட ஸ்ரீதேவி, 4 வயதில் கந்தன் கருணை படத்தில் குழந்தை நட்சத்திரமான அறிமுகம் ஆனார். அதன் பிறகு பல்வேறு முன்னணி நடிகர்களுடன் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
நான்கு நூற்றாண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஸ்ரீதேவியின் தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
எந்த மொழியாக இருந்தாலும் திரைத்துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகம் இருக்காத காலத்தில் தன் திறமையால் முன்னணி நடியாக இருந்தவர் ஸ்ரீதேவி.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 60-வது பிறந்த்நாளான இன்று கூகுள் சிறப்பு டூடுள் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -