Genelia D'Souza : என்றென்றும் ஹாசினி.. ஜெனிலியாவிற்கு பிறந்தநாள் இன்று!
2003ம் ஆண்டு வெளியான 'துஜே மேரி கசம்' என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் திரைதுறையில் அறிமுகமானார்.
முதல் முதலில் நடிகை ஜெனிலியா நடிகர் அமிதாப் பச்சனுடன் பார்க்கர் விளம்பர படத்தில் நடித்திருந்தார். அதை பார்த்து தான் இயக்குநர் ஷங்கர் இவரை 'பாய்ஸ்' படத்திற்காக தேர்வு செய்துள்ளார்.
ஜெனிலியாவுக்கு படத்தில் நடிக்க தான் பிடிக்காதாம் மற்றபடி காலேஜ் படிக்கும் போதிலிருந்தே மாடலிங் மீது தீவிர ஆசை கொண்டு இருந்தாராம்.
தனது 15 வயதிலேயே மாடலிங் துறையில் சேர்ந்துள்ளார். சினிமாவில் நடிப்பதற்கு முன்னர் தேசிய அளவிலான கால்பந்து வீராங்கனையாக இருந்துள்ளார் ஜெனிலியா.
2008ம் ஆண்டு தமிழில் வெளியான சூப்பர் ஹிட் படம் 'சந்தோஷ் சுப்ரமணியம்'. அந்த படம் வெளியானது முதல் இளைஞர்கள் அனைவரும் ஜெனிலியா மாதிரி பொண்ணு தான் எனக்கு வேணும் என அடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அந்த அளவுக்கு அனைவரின் கியூட் கனவு கன்னியானார் ஜெனிலியா. மிகவும் சக்சஸ்ஃபுல் நடிகையாக இருந்த ஜெனிலியா திடீரென தனது காதலர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு நடிப்பதற்கு ஒரு முழுக்கு போட்டுவிட்டார். இந்த தம்பதிக்கு ரியான், ரஹைல் என இரண்டு மகன்கள் உள்ளனர் இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடும் ஜெனிலியாவிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.