RIP Siddique : என்றென்றும் நீங்கா நினைவில் ஃப்ரெண்ட்ஸ் படத்தின் இயக்குநர் சித்திக்!
ஆரம்ப காலகட்டத்தில் மலையாள இயக்குநர் ஃபசிலின் துணை இயக்குநராக பணிபுரிந்த சித்திக், 1989 ஆம் ஆண்டில் தனது முதல் படமான, ‘ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்’என்ற படத்தை இயக்கினார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவித்தியாசமான கதை அமைப்பை கொண்ட படங்களை எடுத்து வந்த இவர் 2001ல் விஜய், சூர்யா, வடிவேலுவை வைத்து ஃப்ரெண்ட்ஸ் படத்தை இயக்கினார். இதற்கு முன்பே இதன் ஒர்ஜினல் வெர்ஷனான மலையாள ஃப்ரெண்ட்ஸ் படம் 1999 ஆம் ஆண்டிலேயே வெளியான தகவல் பலருக்கும் தெரியாது.
எத்தனை முறை பார்த்தாலும் சில படங்கள் சலிக்காது. அப்படிப்பட்ட படங்களின் பட்டியலில் இவரின் ஃப்ரெண்ட்ஸ் படமும் அடங்கும். இப்படம் வரும் வரை வெறும் பெயராக இருந்த நேசமணி, இதன் ரிலீஸிற்கு பின் எமோஷனாக மாறியது.
போக்கிரியை அடுத்து, அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என வரிசையாக சுமார் படங்களை கொடுத்து வந்த விஜய்க்கு ஓரளவு ஆதரவை ஏற்படுத்தியது சித்திக் இயக்கிய காவலன்.
இந்நிலையில் நேற்று மாரடைப்பால் சிகிச்சைப் பெற்று வந்த சித்திக் மரணமடைந்த செய்தி மலையாள திரையுலகத்தை உலுக்கியது. தென்னிந்திய திரையுலக பிரபலங்கள், இவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சித்திக் காலமானதால், அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று வெளியாகவிருந்த துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -