Father Son Movies : அப்பா மகன் உறவை காண்பித்த தமிழ் படங்கள்!
2004 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த படம் 7G ரெயின்போ காலனி. படத்தில் அப்பாவும் மகனும் எதிரும் புதிருமாக இருப்பார்கள். ஒரு கட்டத்தில் மகன் வேலைக்கு சென்ற உடன் அப்பா பூரிப்படையும் காட்சி மிகவும் உருக்கமாக இருக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2007 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த பொல்லாதவன். இது ஒரு கேங்ஸ்டர் படமாக இருந்தாலும் படத்தில் அப்பா மகன் உறவை மிக அழுத்தமாக காட்சிப்படுத்தி இருப்பார் வெற்றிமாறன்.
2016 ஆம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளிவந்த அப்பா. ஒரு அப்பா பிள்ளைகளிடம் எப்படி இருக்க வேண்டும் என்றும் எப்படி இருக்க கூடாது என்றும் தெளிவாக கூறி இருப்பார் சமுத்திரக்கனி.
2022 ஆம் ஆண்டு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளிவந்த டான். அப்பாவாக வரும் சமுத்திரக்கனி மீது ஆரம்பத்தில் வெறுப்பு வந்தாலும் கிளைமாக்ஸில் அப்பாவின் தியாகத்தை காண்பித்து இருப்பார் இயக்குநர்
2022 ஆம் ஆண்டு மித்ரன் ஆர் ஜவாஹிர் இயக்கத்தில் வெளிவந்த திருச்சிற்றம்பலம். பிரகாஷ் ராஜ் அப்பாவாகவும் தனுஷ் மகனாகவும் நடித்து இருந்தனர். இப்படத்தில் அப்பா மகன் பிணைப்பு மிக எதார்த்தமாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -