Madhuri Dixit: கட் சொன்ன பிறகும் கூட கடித்த உதட்டை விடாத நடிகர்; ரத்தம் சிந்த ஓடிய மாதுரி தீக்ஷித்!
கடந்த 1984 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான அபோத் என்ற படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு வரிசையாக ஏராளமான படங்களில் நடித்தார். கடைசியாக கடந்த ஆண்டு வெளியான Bhool Bhulaiyaa 3 என்ற படத்தில் நடித்தார். பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் ஒரு படத்தில் நடித்த போது படத்தின் ஹீரோ தனது உதட்டை விடாமல் கடித்தார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதாவது கமல் ஹாசன், சரண்யா நடிப்பில் வெளியான நாயகன் படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தில் மாதிரி தீக்ஷித் நடித்திருந்தார். கடந்த 1987ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்த படத்தில் சரண்யா ரோலில் தான் மாதுரி தீக்ஷித் நடித்திருந்தார். கமல் ரோலில் வினோத் கண்ணா நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் ஃபெரோஷ் கான் இயக்கி நடித்தார். படத்தில், மாதுரி தீக்ஷித்தும் வினோத் கண்ணாவும் படுக்கையறை காட்சியில் நெருக்கமாக இருப்பது போன்று ஆக்ஷன் காட்ட வேண்டும். ஆனால், வினோத் கண்ணா உண்மையாகவே மாதிரி தீக்ஷித்திடம் அத்துமறி நடந்துள்ளார்.
அப்போது இயக்குநர் கட் சொல்லியிருக்கிறார். ஆனால், வினோத் கண்ணா நெருக்கமாக நடித்து அவரது உதட்டை கடித்து இழுத்துள்ளார். இதனால் அவரது உதட்டில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது. இதையடுத்து மாதுரி தீக்ஷித் அந்த காட்சி எடுக்கப்பட்டு முடிந்த உடனே அங்கிருந்து ஓடியுள்ளார். மேலும், அப்படி எடுக்கப்பட்ட காட்சியை நீக்க வேண்டும் என்று கூறி இயக்குநருக்கு வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸூம் அனுப்பியிருக்கிறார்.
ஆனால், இயக்குநர் அந்த காட்சியை நீக்கவில்லை. அதற்குப் பதிலாக மாதுரி தீக்ஷித்திற்கு பேசப்பட்ட சம்பளத்தை விட கூடுதலாக கொடுக்கப்பட்டு அந்த பிரச்சனை முடிவுக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அதாவது படத்தில் நடிக்க மாதுரி தீக்ஷித்திற்கு ரூ.15 லட்சம் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த சம்பவத்திற்கு பிறகு அவருக்கு ரூ.1 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.’அதன்பிறகு அந்த பிரச்சனை குறித்து மாதிரி தீக்ஷித் எதுவும் பேசவில்லையாம்.