‘நாடே உன் பாடல் கேட்கும் நாளும் தூரத்தில் இல்லை..’ பிறந்தநாள் காணும் ஆல் இன் ஆல் தர்புகா சிவாவிற்கு வாழ்த்துக்கள்!
இயக்குனர், எழுத்தாளர், இசையமைப்பாளர், இசை தயாரிப்பாளர் மற்றும் நடிகரான தர்புகா சிவா, மார்ச் 13, 1982 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகல்லூரி நாட்களில், மூத்த இசைக்கலைஞர்களுடன் தனது நேரத்தை செலவழித்த அவர், டிரம்மராக தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். இவர், கிடாரி திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார்.
தனுஷ் நடிப்பில் வெளியான எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் இசையமைத்து பிரபலமானார். மறு வார்த்தை பேசாதே பாடலில், இவரது பெயரை மிஸ்டர் எக்ஸ் என குறிப்பிட்டு வெளியிட்டனர்.
சிவா, 2015இல் வெளியான ராஜதந்திரம் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார்.
இவர் 2022 ஆம் ஆண்டு வெளியான முதல் நீ முடிவும் நீ திரைப்படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். மேலும் அந்தப் படத்தில் நடிக்கவும் செய்திருந்தார்.
அடுத்து இவர் அஷ்வின் குமார் நடிக்கும் படத்திற்கு இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ஆர்.ஜே ஆகவும் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்தநாள் காணும் ஆல் இன் ஆல் அழகு ராஜாவான தர்புகா சிவாவிற்கு வாழ்த்துக்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -