Stuart Broad : விரைவில் ஓய்வு பெறவிருக்கும் யுவராஜ் சிங்கின் ஃபேவரட் பவுலர் ஸ்டூவர்ட் பிராட்!
இங்கிலாந்து அணியின் முக்கிய பந்து வீச்சாளராக வலம் வருபவர் ஸ்டூவர்ட் பிராட். இவர் பெரும்பாலும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட கூடியவர்.
ஸ்டூவர்ட் பிராட் இந்திய ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு பந்து வீச்சாளர்.
இவர் 2007 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிராக விளையாடினார். அப்போது ஆல்ரவுண்டர் வீரரான யுவராஜ் சிங்குக்கு இவர் வீசிய பந்துகளை இன்றளவும் மறக்கமுடியாது.
ஸ்டூவர்ட் பிராட் வீசிய 6 பந்தையும் சிக்ஸருக்கு விளாசினார் யுவராஜ் சிங். அதுவரை யாரும் செய்யாத ஒன்றை யுவராஜ் செய்தது தற்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
பெரும்பாலும் இத்தகைய சம்பவத்திற்கு பின் யாரும் அதை எதிர்த்து வெளியே வந்ததில்லை. ஆனால் ஸ்டூவர்ட் பிராட் கேலி கிண்டலையெல்லாம் உடைத்து மீண்டும் திரும்பினார்.
இவர் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்களை வீழ்த்திய 5வது பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற பட்டத்தையும் தனதாக்கியுள்ளார். தற்போது ஸ்டூவர்ட் பிராட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெருவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இங்கிலாந்து ரசிகர்களுக்கு வருத்தத்தை எற்படுத்தியுள்ளது.