✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

King of Kotha: 'உன் அழகில் என் விழிகள் பூப்பூக்குதே...’ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள கிங்க் ஆஃப் கோதா திரைப்படத்தின் இரண்டாம் பாடல்!

சுபா துரை   |  21 Aug 2023 01:36 PM (IST)
1

மலையாள நடிகரான துல்கர் சல்மான் அனைவரும் விரும்பும் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவரின் நடிப்பில் கடந்த ஆண்டுகளில் வெளிவந்த ஹே சினாமிகா, சல்யூட், சீதாராமம் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து ஹிட் ஆகியது.

2

திரைப்படங்களையும் தாண்டி துல்கர் சல்மான் நடித்த ஃபேமிலி மேன் மற்றும் ஃபார்சி வெப் தொடர்களும் நல்ல வரவேற்பை பெற்றன. அடுத்ததாக டி.கே. இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருந்த கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப் தொடரும் கடந்த 18-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்த வெப் தொடர் பாசிட்டிவான கமெண்ட்ஸ்களை பெற்று வருகிறது.

3

இதற்கிடையே துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாக இருக்கும் கிங் ஆஃப் கோதா படத்தின் இரண்டாவது பாடல் நேற்று வெளியானது. 1980-ஆம் ஆண்டுகளில் நடைபெறும் கதையாக எடுக்கப்பட்டுள்ள கிங் ஆஃப் கோதாவில், ராஜு என்கிற ராஜேந்திரன் எனும் பாத்திரத்தில் கேங்ஸ்டராக துல்கர் சல்மான் நடித்துள்ளார்.

4

இதில், ஐஸ்வர்யா லக்ஷ்மி, செம்பன் வினோத் ஜோஸ், பிரசன்னா, அனிகா சுரேந்திரன், சாந்தி கிருஷ்ணா, சரண் சக்தி, ராஜேஷ் சர்மா, சார்பட்டா பரம்பரையில் டான்ஸிங் ரோசாக இருந்த சபீர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

5

பான் இந்தியா படமாக உருவாகி இருக்கும் கிங் ஆஃப் கோதா படத்தை துல்கர் சல்மானின் வேஃபரர் ஃபிலிம்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளன. பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஓணம் பண்டிகையை ஒட்டி ரிலீசாக உள்ளது.

6

இந்த நிலையில் நேற்று வெளியான என் உயிரே பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஐஸ்வர்யா லக்‌ஷ்மியும், துல்கர் சல்மானும் கண்களால் காதலை கூறும் விதமாக இருக்கும் என் உயிரே பாடலை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

7

பாடலில் இடம்பெற்றுள்ள “என் உயிரே உன் விழியில் கண் பார்க்குதே...உன் அழகில் என் விழிகள் பூப்பூக்குதே... என் விழிகள் உன் வருகையை தான் பார்க்குதே” என்ற வரிகள் ரசிக்க வைத்துள்ளன. சத்யப்பிரகாஷ் பாடியுள்ள என் உயிரே பாடலுக்கு ஷான் ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • King of Kotha: 'உன் அழகில் என் விழிகள் பூப்பூக்குதே...’ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள கிங்க் ஆஃப் கோதா திரைப்படத்தின் இரண்டாம் பாடல்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.