DON working stills: டான் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்!
டாக்டர் படத்தைத் தொடர்ந்து டான் படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், பிரம்மாண்ட டான் பெயர் போட்ட கேக்கை வெட்டி படக்குழுவினருடன் கொண்டாடிய புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கடந்த 13ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசானது டான் படம்.
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை தொடர்ந்து டான் படமும் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளதுடன் வசூலிலும் சிறப்பான கலெக்ஷனை குவித்து வருகிறது.
லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து டான் படத்தை தயாரித்தன. டான் பெயர் போட்ட கேக் உடன் சக்சஸ் பார்ட்டி களைகட்டியது.
இந்த திரைப்படத்தின் சக்ஸஸ் பார்ட்டியில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் கேக் கட்டிங்கின் போது டான் படத்தில் நடித்த எஸ்.ஜே. சூர்யா மற்றும் நடிகை சிவாங்கி உடனிருந்தனர்
இயக்குநர் சிபி சக்கரவர்த்தி மற்றும் அவரது தொழில்நுட்ப கலைஞர்கள், எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பாளர் கலையரசு உள்ளிட்ட பலர் இந்த வெற்றி விழாவில் கலந்து கொண்டனர்.