ஹீரோ போல் இருக்கும் அபிநயாவின் வருங்கால கணவர்! யார் அவர்... இவ்வளவு பெரிய பிஸ்னஸ் மேக்னெட்டா?

நாடோடிகள் படம் மூலமாக பிரபலமானவர் நடிகை அபிநயா. இந்தப் படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது வென்றார். இதே போன்று தெலுங்கு மற்றும் கன்னட படங்களுக்கும் பிலிம்பேர் விருது வென்றார். குறுகிய காலத்திலேயே பல மொழிகளில் நடித்து பிரபலமானார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
நாடோடிகள், ஆயிரத்தில் ஒருவன், ஈசன், வீரம், பூஜை, தனி ஒருவன், தாக்க தாக்க, குற்றம் 23, நிசப்தம், விழித்திரு, மார்க் ஆண்டனி, தி ஃபேமிலி ஸ்டார், பனி ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக வெளியான பனி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. இந்தப் படம் கொடுத்த வரவேற்பு பிறகு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

'பனி' படத்தின் மூலம் கிடைத்த வரவேற்பு பிறகு அவரைப் பற்றி வதந்திகள் பரவியது. அப்போது தான் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறியிருந்தார். சிறு வயது முதலே காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி நடிகையான அபிநயா சினிமாவில் விடாமுயற்சியோடு சாதித்து வருகிறார்.
கடந்த 15 வருடங்களாக தான் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கூறிய அபிநயா... சிறு வயது முதலே அவர் தனது நண்பர். எங்களுக்கே தெரியாமல் நாங்கள் இருவரும் காதல் உறவுக்குள் வந்துவிட்டோம். இனிமேல் யாருடனும் ஒப்பிட்டு பேச வேண்டாம் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான் முதல் முறையாக காதலன் புகைப்படத்தை வெளியிட்டு இவர் தான் தனது காதலன் என்று அறிமுகம் செய்துள்ளார். கடந்த 9ஆம் தேதி அபிநயாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது கூட அபிநயா தனது வருங்கால கணவர் புகைப்படத்தை வெளியிடவில்லை.
இந்த நிலையில் தான் அபிநயா தனது வருங்கால கணவர் கார்த்திக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கார்த்திக் ஹைதராபாத்தில் பிரபலமான தொழிலதிபர்.
சொந்தமாக ஸ்கூல், காலேஜ், இறால் எக்ஸ்போர்ட்ஸ், ஹோட்டல் பிஸினஸ் என்று பல நிறுவனங்களை நிர்வகித்து வரும் பிஸ்னஸ் மேக்நெட்டாக உள்ளார். அபிநயா மற்றும் கார்த்திக் திருமணம் குறித்து எந்த தகவலும் இல்லை.
இப்போது தான் நிச்சயதார்த்தம் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அபிநயா தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -