Diwali Releases 2023 : இந்த பண்டிகை மாதத்தில் வெளியாகும் பெரிய படங்கள் என்னென்ன?
ஒவ்வொரு வருடத்தில் வரும் தீபாவளி பண்டிகையையொட்டி திரைப்படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்று.
பட்டாசு வெடிப்பது, தொலைக்காட்சி பார்பதை தவிர்த்து, சிலர் திரையரங்கில் படம் பார்த்து தீபாவளியை கொண்டாடுவர். அந்த வகையில், எந்தெந்த படங்கள் இந்த பண்டிகை மாதத்தில் வெளியாகிறது என்று பார்க்கலாம்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன், இளவரசு, பவா செல்லதுரை ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் நீளம் 2 மணி நேரம் 52 நிமிடங்கள் ஆகும்.
ராஜு முருகன் இயக்கிய ஜப்பான் படத்தில் கார்த்தி, அனு இமானுவேல், சுனில் ஆகியோர் நடித்துள்ளனர். நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் நீளம் 2 மணி நேரம் 36 நிமிடங்கள் ஆகும்.
அப்படியே பாலிவுட் பக்கம் சென்றோம் என்றால் சல்மான் கான் - கத்ரீனா கைஃபின் டைகர் 3 வெளியாகிறது. இப்படம் நவம்பர் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் நீளம் 2 மணி நேரம் 33 நிமிடங்கள் ஆகும்.
மார்வெல் காமிக்ஸை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட தி மார்வெல்ஸ் படம் நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் நீளம் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் ஆகும்