Divya Spandana : காட்டுத்தீயாய் பரவிய மரணச்செய்தி.. முற்றுப்புள்ளி வைத்த பிரபல பத்திரிகையாளர்!
12 மணி அளவில், நடிகை மற்றும் முன்னாள் எம்.பியுமான திவ்யா ஸ்பந்தனா காலமானார் என்ற தகவல் காட்டுத்தீயாய் பரவியது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App40 வயதே ஆன, ரம்யா எனும் திவ்யா மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற தகவல் சில தொலைக்காட்சிகளிலும், எக்ஸ் பக்கத்திலும் பரவியது. இதனால் அவரின் ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்தனர்.
சில நிமிடங்கள் கழித்து, திவ்யாவின் மரணச்செய்தி, வெறும் வதந்தி என தகவல் வெளியாகி பலரையும் ஆசுவாசப்படுத்தியது.
இந்த வதந்தி பரவும் சில நிமிடங்களுக்கு முன்தான், பிரபல பத்திரிக்கையாளர் சித்ரா சுப்பிரமணியம், “திறமை நிறைந்த, மென்மையான திவ்யாவுடன் இரவு உணவு சாப்பிடேன். அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி. நாங்கள் பல விஷயங்களை பற்றி பேசினோம். பெங்களூரு நகருக்கான எங்கள் அன்பையும் பரிமாறிக்கொண்டோம்.” என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். மீண்டும் அவரே, “இப்போதுதான் திவ்யாவுடன் பேசினேன். அவர் நலமாக உள்ளார். ப்ராக்கிற்கு நாளை சென்று பின்னர் பெங்களூரு செல்லவுள்ளார்.”என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் பொய் தகவலை பரவிய பல ஊடங்கள், செய்தி தொடர்பாளர்கள் அதை டெலீட் செய்து வருகின்றனர்.
குத்து, கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி ஆகிய தமிழ் படங்களில் திவ்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -