Nelson About Jailer : ஜெயிலரில் நடிகர் பாலைய்யாவா? இயக்குநர் நெல்சன் என்ன கூறினார் தெரியுமா?
ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியானது.
இதில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே இருந்தது.
அதேபோல், இந்த படத்திற்கான முதல் நாள் டிக்கெட்டுகள் முன்பதிவிலேயே முழுவதுமாக விற்று தீர்ந்தது.
தற்போது இயக்குநர் நெல்சனிடம் தொலைப்பேசியில் பேசிய மோகன்லால், மலையாளத்தில் ஜெயிலர் படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது என கூறியுள்ளார்.
அதேபோல், சிவராஜ்குமார் கூறுகையில், “நான் இன்னும் படம் பார்க்கவில்லை இனிமேல் தான் பார்க்க உள்ளேன். ஆனால் படத்தின் வரவேற்பு இங்கு அமோகமாக உள்ளது.”
இதனை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் கூறுகையில் “ஜெயிலர் படத்தின் கதையை எழுதும் போது பாலகிருஷ்ணாவையும் இதில் சேர்க்கலாம் என தோன்றியது. ஆனால், அது படத்தோடு ஒத்து வராததால் கைவிடப்பட்டது”