Lokesh Kanagaraj : சினிமாட்டிக் யுனிவர்சல் கான்செப்ட்டில் லோக்கி படமெடுக்க இதுதான் காரணமா?
தமிழ் சினிமாவில் 2017ம் ஆண்டு வெளிவந்த மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.
இதை தொடர்ந்து 2019ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி படத்தை இயக்கி பிரபலமானார்.
அடுத்ததாக, விஜய் நடித்த மாஸ்டர் படத்தை லோகேஷ் இயக்கி இருந்தார் அதையடுத்து கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தை இயக்கி முன்னணி இயக்குநர்களில் ஒருவராக ஆனார்.
சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் “பொதுவாக நான் ஒரு டிசி ஃபேன். அதில் வரும் கதாபாத்திரங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்”என்று பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் சினிமாட்டிக் யுனிவர்சல் கான்செப்ட்டை வைத்து படம் எடுத்து வரும் லோகேஷிற்கு, டிசி ஒரு பெரிய இன்ஸ்பிரேஷனாக உள்ளது. இப்படத்தில் வரும் முக்கியமான கதாபத்திரங்களின் ஸ்பின் ஆஃப் கதைகளை வருங்காலத்தில் எதிர்ப்பார்க்கலாம் என்பது குறிப்பிடதக்கது.
அதை தொடர்ந்து தற்போது இயக்கியுள்ள லியோ படமும் எல்.சி.யூ வில் வரமுமா வராதா என்ற குழப்பம் சினிமா ரசிகர்கள் இடையே நிலவி வருகிறது