Atlee movies Gross : ராஜா ராணி முதல் ஜவான் வரை.. பல கோடிகளை வசூல் செய்த அட்லீயின் படங்கள்!
தன் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் கமர்ஷியல் ரீதியாக அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வரும் அட்லீ, ஜவான் படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அப்படிபட்ட இளம் இயக்குநரான அட்லீ இயக்கிய படங்கள் எவ்வளவு வசூல் செய்தது என்று பார்க்கலாம்.
முதலில், ராஜா ராணி. ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பின், தனது முதல் படத்தில் ஆர்யா, நயன், ஜெய், நஸ்ரியா ஆகியோரை வைத்து காதல் நிறைந்த காமெடி படத்தை இயக்கினார். இப்படம் 80 கோடி ரூபாயை வசூல் செய்தது.
இரண்டாவது படத்தை முன்னணி நடிகரான விஜய்யை வைத்து இயக்கினார். தெறி படத்தில் சமந்தா, ஏமி ஜாக்சன், நைனிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் 155 ரூபாய் கோடியை வசூல் செய்தது.
அட்லீயின் மூன்றாவது படத்திலும் விஜய்யே நடித்தார். வெற்றி மாறன், வெற்றி, மாறன் ஆகிய மூன்று கதாபாத்திரத்திலும் நடித்தார். மெர்சல் படம் 255 கோடி ரூபாயை வசூல் செய்தது.
கால் பந்து விளையாட்டை அடிப்படையாக கொண்டு உருவான கமர்ஷியல் படமே பிகில். இப்படம் அட்லீ - விஜய்யின் மூன்றாவது கூட்டணியில் அமைந்தது. இது 310 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது
பாலிவுட் திரையுலகில் அறிமுகமான உடனே, ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். இப்படம் இதுவரை 1000 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.