இளையராஜா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் தனுஷ்..மகிழ்ச்சி அடைந்த சினிமா ரசிகர்கள்!
நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இத்திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.
இதையடுத்து நடிகர் தனுஷ் தனது 50 வது படத்தை தானே எழுதி இயக்கப்போவதாக அதிகார்வப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.
தனுஷ் நடிக்கும் 51வது திரைப்படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், தனுஷின் 52வது படமும் தற்போது உறுதியாகியுள்ளது.
நீண்டகாலமாக பேசப்பட்டு வந்த இளையராஜா வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது.
மேலும் தனுஷ் நடிக்கவுள்ள இந்த திரைப்படமானது தனுஷுக்கு சவாலானதாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.
இளையராஜாவின் சாதனைகளை நடிகர் தனுஷின் நடிப்பில் திரையில் பார்க்க அவரது ரசிகர்கள் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் எதிர்பார்த்துகாத்துக்கொண்டிருக்கின்றனர்