Captain Miller Success : கில்லர் கில்லர்..கேப்டன் மில்லர்.. வாகை சூடிய நடிகர் தனுஷ்!
கேப்டன் மில்லர் குறித்த அறிவிப்பு வந்த முதல் நாளிலிருந்து தனுஷ் ரசிகர்களிடமும் சினிமா ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வந்தது.

கேப்டன் மில்லர் பாடல்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளியாகி வந்து போது, இசை வெளியீட்டு விழாவும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டின் பொங்கல் வெளியீட்டிற்கு ரெடியான கேப்டன் மில்லர், ரிலீஸ் அகும் முன், “3 வருட கடின உழைப்பை மக்களாகிய உங்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.” என தனுஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் நேற்று (12.01.24) வெளியான கேப்டன் மில்லர் நல்ல விமர்சனங்களை பெற்று, திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கேப்டன் மில்லர் வெற்றியை கொண்டாடும் வகையில், கதாநாயகன் தனுஷிற்கு, படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -