Captain Miller Audio Launch : கூடிய விரைவில் நடக்கவிருக்கும் கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா!
ராக்கி ,சாணிக் காயிதம் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் தற்போது நடிகர் தனுஷை வைத்து கேப்டன் மில்லர் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇத்திரைப்படத்தில் தனுஷ், பிரியங்கா மோகன்,நாசர்,சிவராஜ் குமார், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.
இத்திரைப்படம் மெகா பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது. கேப்டன் மில்லர் திரைப்படம் டிசம்பரில் வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்டது.
அதன் பின்னர் கேப்டன் மில்லர் திரைப்படம் 2024 ஆம் ஆண்டின் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்ற தகவலை தயாரிப்பு நிறுவனம் அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதுமட்டும் இல்லாமல் படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வரும் நவம்பர் மாதம் இறுதியில் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் தற்போது வைரலாக பரவிவருகிறது.
ஜி வி பிரகாஷ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -