HBD Dhanush: ரசிகர்களின் மனம்கவர்ந்த தனுஷ் நடிப்பில் வெளியாக சூப்பர்ஹிட் படங்கள்!
புதுப்பேட்டை படத்தில் கொக்கி குமார் என்ற கேங்ஸ்டர் தலைவராக தனுஷ் நடித்து இருந்தார். பள்ளி படிக்கும் சிறுவன் எப்படி ஒரு பெரிய கேங்ஸ்டர் தலைவன் ஆகிறான். அதற்கு பிறகு தனுஷுக்கு என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை.
பொல்லாதவன் படத்தில் பிரபு என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்து இருந்தார். தனுஷின் பைக்-ஐ யாரோ திருடிவிடுகின்றனர். இதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் தனுஷுக்கும் வில்லன் கும்பலுக்கு மோதல் ஏற்படுகிறது. அடுத்தது என்ன எனபதே மீதி கதை.
ஆடுகளம் படத்தில் கருப்பு என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்து இருந்தார். சேவல் சண்டை மூலம் தனுஷ் வெற்றி பெற்ற 3 லட்சம் ரூபாய் பணத்தை பேட்டைக்காரன் என்பவரிடம் கொடுத்து வைத்திருக்கிறார். அவர் அந்த பணத்தை தொலைத்து விடுகிறார். பிறகு தனுஷிக்கு எண்ணலாம் சிக்கல்களை சந்திக்கிறார் என்பதே படத்தின் கதை.
வேலையில்லா பட்டதாரி படத்தில் ரகுவரன் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்து இருந்தார். பொறியியல் படித்த தனுஷ் இன்ஜினியர் வேலைக்கு தான் செல்வேன் என்று குறிக்கோளோடு இருக்கிறார். ஒரு வழியாக இன்ஜினியர் வேலை மூலம் ஒரு பெரிய பில்டிங் கட்டுவதற்கு ப்ராஜெக்ட் கிடைக்கிறது. அந்த பில்டிங்கை கட்டவிடாமல் வில்லன் இல்லாத வேலைகளை பார்க்கிறார். வில்லனை சமாளித்து பில்டிங்கை எப்படி கட்டினார் என்பதே மீத கதை.
வடசென்னை படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்து இருந்தார். ஆண்ட்ரியா கணவர் அமீர் சாவுக்கு பழிவாங்க தனுஷை வைத்து சூழ்ச்சிகள் செய்கிரார். இதனால் சமுத்திரக்கனி, கிஷோர், பவன் இடையில் மோதல் ஏற்படுவதோடு படம் முடித்துவிடும்.இப்படத்தை நான் லீனியரில் மூலம் திரைக்கதை அமைத்திருப்பார் வெற்றிமாறன்.
கர்ணன் படத்தில் கர்ணன் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்து இருந்தார். ஜாதியை காரணமாக வைத்து போலீஸ்காரர்களுக்கும் தனுஷ் ஊர் மக்களும் மோதல் ஏற்படுகிறது. அதற்கு பிறகு என்ன என்பதே மீத கதை.