Raayan Update : வெளியாக காத்திருக்கும் தனுஷின் 50வது படம்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் தனுஷ் ராயன் என்ற திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார்.
நடிகர் தனுஷ் இதற்கு முன்பு இயக்கிய பவர் பாண்டி திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றிருந்தது.
நடிகர் தனுஷ் நடிப்பில் அசுரனாக இருந்தாலும் பாடல்கள் எழுதுவதிலும் பாடல்கள் பாடுவதிலும் ஆர்வமிக்கவர் என்பது நாம் அறிந்த ஒன்றே.
அந்தவகையில் நடிகர் தனுஷ் அவருடைய ஐம்பதாவது திரைப்படத்தை அவரே எழுதி இயக்கியுள்ளார். ராயன் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி வந்து கொண்டிருக்கின்றன.
ராயன் திரைப்படத்தில் நடிகர் தனுஷ், எஸ் ஜே சூர்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். ராயன் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ராயன் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வெளியாகி வருகின்றன.