D50 : இதற்குத்தான் தனுஷ் மொட்டை போட்டாரா? சொல்லாமல் கொள்ளாமல் நடந்த டி50 பட பூஜை!
தனுஷ் பிஸியாக நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. தனுஷ் அடுத்ததாக நடித்து இயக்கும் டி50 படம் குறித்த அப்டேட்கள் அதிகமாக பகிரப்பட்டன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசன் பிச்சர்ஸ் இப்படத்தைத் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜோடி, எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா முரளி உள்ளிட்டோர் இப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று D50 படத்தின் பூஜை சத்தமில்லாமல் முடிந்து, படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக இணையத்தில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இப்படத்துக்காக 500 வீடுகளைக் கொண்ட பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 90 நாள்கள் தொடர்ச்சியாக ஷூட்டிங் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்துக்கு ராயன் எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும், வட சென்னையை மையப்படுத்திய ரிவெஞ் கதையாக இப்படம் இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொட்டை அடித்த தனுஷின் AI புகைப்படம் வைரலாகி வருகிறது. ‘இந்த படத்தின் லுக்கிற்காகத்தான் தனுஷ் மொட்டை அடித்திருப்பார் போல’என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -