Alphonse Putheran : ஒரே படத்தில் ஏழு பாடல்கள்.. இளையராஜாவுடன் கைக்கோர்த்த அல்போன்ஸ் புத்திரன்!
மலையாள திரையுலகில் இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், படத்தொகுப்பாளர் என பன்முக திறமை கொண்டவர்களில் ஒருவர் அல்போன்ஸ் புத்திரன். பல குறும்படங்களை இயக்கிய அவர், 2013 ஆம் ஆண்டு நிவின் பாலி, நஸ்ரியாவை முதன்மை கதாபாத்திரங்களாக கொண்டு ‘நேரம்’ என்ற படத்தை இயக்கியிருந்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநிவின் பாலி ஹீரோவாக நடிக்க அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என 3 ஹீரோயின்களை கொண்டு 2015 ஆம் ஆண்டு ‘பிரேமம்’ என்ற படத்தை இயக்கினார். இப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்படும் அளவிற்கு இந்திய அளவில் ஹிட் அடித்தது.
அடுத்ததாக அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் படத்திற்கு கிஃப்ட் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். மொத்தம் 7 பாடல்கள் இந்த படத்தில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிஃப்ட் படத்தில் சாண்டி, கோவை சரளா, சஹானா சர்வேஷ், சார்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இந்த செய்தியை அறிந்துகொண்ட பிரேமம் ரசிகர்களும் இளையராஜாவின் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபத்தில் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான விடுதலை முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த காட்டு மல்லி பாடலும் ஒன்னோட நடந்தா பாடலும் செம ஹிட்டாகி ராஜா எப்போதுமே ராஜாதான் என்று உணர வைத்தது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -