Dates milkshake recipe : சத்தும் சுவையும் நிறைந்த டேட்ஸ் மில்க்ஷேக்..வீட்டிலேயே செய்யுங்கள்!
குழந்தைகள் ட்ரை ப்ரூட்ஸ் சாப்பிட மறுக்கிறார்களா? அதிக செலவு செய்து வாங்கியும் ட்ரை ஃபுரூட்ஸ் வீணாகிறதா? இதோ இந்த சுவையான டேட்ஸ் மில்க்ஷேக் செய்து கொடுங்கள்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள் : பால் 2 கப், விதை இல்லாத பேரிச்சம் 15, முந்திரி 1/4 கப், பாதாம் 1/4 கப், பிஸ்தா 1 ஸ்பூன், ஏலக்காய் தூள், காய்ச்சிய பால் 500 மிலி, தேன், குங்குமப்பூ.
செய்முறை : முதலில் ஒரு கடாயில் பால், விதை இல்லாத பேரிச்சம், முந்திரி, பாதாம், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
சிறிது கட்டியான உடன் அதனை மிக்ஸியில் போட்டு நன்றாக அடித்து கொள்ளவும்.
அதனுடன் காய்ச்சிய பாலை ஊற்றி மறுபடி நன்றாக அடித்து கொள்ளவும்.
இப்போது இதனை ஒரு க்ளாசில் ஊற்றி பிஸ்தா மற்றும் குங்குமப்பூ அருந்தலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -