Kavin New Movie : ‘சோக்காளி வாடா வாடா ..’ இயக்குநர் அவதாரம் எடுத்த டான்ஸ் மாஸ்டர் சதீஷ்!
ஜோன்ஸ் | 26 May 2023 01:24 PM (IST)
1
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொடர்கள் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் கவின்
2
இவர் தற்போது ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார்
3
பல திரைப்படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ள சதீஷ் கிருஷ்ணன் இப்படம் மூலம் முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகிறார்.
4
இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க உள்ளார்
5
இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அயோத்தி படத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கவிருக்கிறார்
6
இந்த அப்டேட் வெளியான பின் ரசிகர்கள், நடிகர் கவினுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் குவித்து வருகின்றனர்