Cook With Comali Kondattam pics | ரகளை நிறைந்த குக் வித் கோமாளி கொண்டாட்டம் போட்டோஸ்..!
குக் வித் கோமாளி முதல் சீசன் நிகழ்ச்சியை விட, கடந்த வருடம் இறுதியில் தொடங்கி இந்த வருடம் ஏப்ரலில் நிறைவடைந்த இரண்டாவது சீசன் மிகப்பெரிய ஹிட் ஆனது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற புகழ், சிவாங்கி, அஸ்வின், பவித்ரா, தர்ஷா குப்தா உள்ளிட்ட பலர் சினிமாவில் நுழைந்து தற்போது பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார்கள்.
அதிலும் அஸ்வின், ஒரே நேரத்தில் பல படங்களில், ஹீரோவாக ஒப்பந்தமாகி இருக்கிறார்
மேலும் புகழ் பல டாப் ஹீரோ படங்களில், காமெடியனாக நடித்து வருகிறார். குறிப்பாக அஜித்தின் வலிமை படத்தில் அவர் நடித்து இருப்பதை சமீபத்தில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு பெரிய வரவேற்பை பெற்ற குக்கு வித் கோமாளி 2 போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள், மீண்டும் ஒன்று சேரும் குக்கு வித் கோமாளி 2 கொண்டாட்டம் நிகழ்ச்சி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அதில் அனைத்து போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் மீண்டும் வந்து பங்கேற்று இருக்கிறார்கள். வழக்கமாக அவர்கள் ஒன்று சேர்ந்தால் என்ன ஆகும் என எல்லோருக்கும் தெரியும், காமெடி அட்ராசிட்டிக்கு பஞ்சம் இருக்காது.
இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த ஷோ ஒளிபரப்பானது