HBD Senthil : ‘ஒரு பழம் இங்க இருக்கு இன்னொன்னு எங்க..’நகைச்சுவை மன்னன் செந்திலுக்கு இன்று பிறந்த நாள்!
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத காமெடி நடிகர்களுள் கவுண்டமணி - செந்தில் ஆகிய இருவரும் அடங்குவர். இவர்கள் காம்போ இருந்தாலே அந்த படம் ஹிட்தான் என்ற நிலை தமிழ் சினிமாவில் உருவானது.
கிடைத்த வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக்கொண்டு, மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இவர்.
நடிகர் ராமராஜனுக்கு திருப்புமுனையாக அமைந்த படம் கரகாட்டக்காரன். இப்படத்தின் வாழைப்பழ காமெடி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. ஒன்னு இங்க இருக்கு இன்னொன்னு எங்க என்ற கவுண்டமணியின் கேள்விக்கு, ‘அதானா இது’ என்று செந்தில் பதில் அளிப்பார்.
இயக்குனர் ஷங்கரின் முதல் படமான ஜென்டில்மேனில், செந்திலின் குறும்புக்கு எல்லையே இருக்காது. கூட்டமாக இருக்கும் பெண்களிடம் செந்தில் விளையாடுவது, அதைப்பார்த்து கவுண்டமணி கோபப்படுவது. இப்படத்தில் செந்திலின் டிக்கிலோனா, டிக்கிலோனா காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது.
லக்கி மேன் படத்தில் கவுண்டமணி எமதர்மனாகவும், செந்தில் சித்திரகுப்தராகவும் நடித்திருந்தனர். இப்படத்தில் மேலோகத்தில் இருந்து பூலோகத்திற்கு வந்து இவர்கள் படும்பாடு மிகவும் நகைச்சுவையாக இருக்கும். இப்படத்தில் கவுண்டமணியை விட செந்திலின் தாக்கம் அதிகம்.
கரகாட்டக்காரன், ஜென்டில்மேன், லக்கி மேன், சேதுபதி ஐபிஎஸ், வைதேகி காத்திருந்தாள். போன்றவை 90 களில் அதிகம் பேசப்பட்ட படங்கள் ஆகும்.
‘டேய் அண்ணனுக்கு பொற வைடா’, ‘அண்ணன் நன்றி உள்ளவரு’, ‘புலிக்குட்டி தம்பி பூனக்குட்டி, பூனக்குட்டி தம்பி புலிக்குட்டி’, ‘கோழி முட்ட மாதிரி இருக்கு, இதுல எப்படிண்ணே லைட் எரியும்?’ ‘என்னண்ணே உடைச்சிட்டீங்க’ஆகிய வசனங்கள் பலரை சிரிக்க வைத்தது.
ஒருகாட்சியில் வந்து இருந்தாலும் மக்களுக்கு குட் இன்பர்மேஷன் குடுத்து இருப்பார் பாய்ஸ் திரைப்படத்தில் இவருக்கு இன்று பிறந்தநாள்.