Cinema Updates : இந்தியன் 2 கிளைமாக்ஸ் முடிந்ததும் சர்ப்ரைஸ் இருக்கு!
கார்த்திக் சுப்பராஜ், நடிகர் சூர்யாவின் 44 வது படத்தை இயக்கப்போவதாக அறிவிப்பு வந்தது. சூர்யாவும் கார்த்திக் சுப்பராஜும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க போவதாக படக்குழு தெரிவித்துள்ளது
2023 ஆம் ஆண்டு சசிகுமாரை வைத்து அயோத்தி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மந்திர மூர்த்தி. இவருக்கு முதல் படமே வெற்றி படமாய் அமைந்தது. சசிகுமாரும் மந்திர மூர்த்தியும் மீண்டும் இணைய போவதாக தகவல் பரவிவருகிறது.
ஜூனியர் என்.டி.ஆரின் 30 வது படமான தேவரா முதல் பாகத்தை கொரட்டாலா சிவா இயக்கி வருகிறார். அனிருத் இசையில் ஃபர்ஸ்ட் சிங்களான ஃபியர் வருகின்ற மே 19 ஆம் தேதி வெளியாக போவதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஷங்கர் - கமல்ஹாசன் படமான இந்தியன் 2 வருகின்ற ஜூன் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், இந்தியன் 2 கிளைமாக்ஸ் காட்சி முடிந்த உடன் இந்தியன் 3 படத்தின் ட்ரெய்லர் எண்ட் கிரெடிட்ஸில் வரும் என சொல்லப்படுகிறது.