Cinema Updates : பெரியாராக நடித்தவர் மோடியாக நடிக்க போறாரா? இன்றைய சினிமா அப்டேட்ஸ் இதோ!

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள 25 வது படம் PT சார். இந்த படத்தில் இவரே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். PT சார் படத்தின் ப்ரோமோஷனுக்காக இன்று சின்னசாமி மைதானத்தில் நடக்கும் CSK Vs RCB போட்டியில் பார்வையாளராக பங்கேற்கவுள்ளார் ஆதி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
தென்னிந்திய சினிமாவின் பிரபல குணசித்திர நடிகரான சத்யராஜ், தற்போது நரேந்திர மோடியின் பயோ-பிக் படத்தில் மோடியாக நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இவர் இதற்கு முன் பெரியாராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படத்தை எடுத்த இயக்குநர் ஸ்ரீ கணேஷ் தற்போது நடிகர் சித்தார்த்தை வைத்து படம் இயக்க போவதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது சித்தார்த்தின் 40 -வது படமாகும்
நடிகர் விஜய் சேதுபதியின் 51 -வது படத்தின் டைட்டில் டீஸர் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ஏஸ் (Ace) என்று பெயரிடப்பட்டுள்ளது. ருக்மணி வசந்த், யோகிபாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
இயக்குநர் வெங்கட் பிரபு - நடிகர் விஜய்யின் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் படம் தி கோட். இந்த படத்தில் விஜய்யுடனான VFX காட்சிகள் நிறைவு அடைந்துள்ளதாக, எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் வெங்கட் பிரபு.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -