Cinema Update : ஜூனியர் என் டி ஆருடன் கைகோர்க்கும் பிரசாந்த் நீல்.. இன்றைய சினிமா அப்டேட்ஸ் இதோ!
சிறுத்தை சிவா சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள படம் கங்குவா. இப்படத்தின் டீசர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகலாம் என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மகிழ் திருமேனி அஜித் குமார் கூட்டணியில் உருவாகியுள்ள படம் விடாமுயற்சி. இப்போது வெளியாகியுள்ள புதிய போஸ்டரில் ஆரவின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
ஜூனியர் என் டி ஆரை வைத்து பிரசாந்த் நீல் புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளது. மேலும் இப்படம் ஜனவரி 9 2026 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஹிப்ஹாப் தமிழா இயக்கி, நடித்து, இசையமைத்து வரும் கடைசி உலக போர் படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கள் ட்ராக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஹாட் ஸ்பாட் படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக்கின் புதிய படத்தின் அறிவிப்பு இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது