Oppenheimer Ticket Sale : ரிலீஸூக்கு முன்னரே பட்டையை கிளப்பும் ஓப்பன்ஹைமர் படத்தின் டிக்கெட் விற்பனை!
ஹாலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குநரான கிறிஸ்டோஃபர் நோலன், அணு ஆயுதத்தை முதன்முதலில் கண்டுபிடித்தவரான ஓப்பன்ஹைமரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு படம் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் ஓப்பன்ஹெய்மராக பிரபல நடிகர் சிலியன் மர்ஃபி நடித்துள்ளார்.
கடந்த இருபது ஆண்டுகளாக நோலனின் படங்களில் நடித்துவரும் சிலியன் மர்ஃபி முதன்முறையாக பிரதானக் கதாபாத்திரமாக நடித்துள்ளார்.
முன்னதாக ஐ மேக்ஸ் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ஓப்பன்ஹைமர் திரைப்படத்தை 24 மணி நேரமும் திரையிடப்போவதாக அறிவித்துள்ளது பி.வி.ஆர் நிறுவனம்.
கடந்த ஜூலை 4ஆம் தேதி முதல் இந்தப் படத்திற்கான முன்பதிவு தொடங்கியது. இந்நிலையில், இந்தியாவில் இதுவரை மொத்தம் 3 லட்சம் டிக்கெட்டுகள் புக் மை ஷோவில் விற்பனையாகி இருக்கின்றன.
இதில் 42 சதவிகிதம் டிக்கெட்கள் ஐமேக்ஸ் காட்சிகளுக்கான டிக்கெட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.