Chandramukhi 2 : ராஜா கெட்-அப்பில் ராகவா லாரண்ஸ்..வெளியான சந்திரமுகி 2 படத்தின் புது போஸ்டர்!
ஸ்ரீஹர்சக்தி | 31 Jul 2023 11:50 AM (IST)
1
ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு ஆகியோர் நடித்து வெளியாக உள்ள படம் சந்திரமுகி 2. இந்த படத்தை பி. வாசு இயக்கியுள்ளார்.
2
சந்திரமுகி 2 படத்தில் கதாநாயகியாக நடிக்கும் கங்கனா ரனாவத், 'எனக்கு இந்த படம் மிகவும் முக்கியமான படமாகும்' என்று கூறியுள்ளார்.
3
இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், டப்பிங் வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது.
4
முதல் பாகத்தினாலும் இப்படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளதாலும், இதன் மீது இருக்கும் எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.
5
சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளித்தது. இதனை தொடர்ந்து தற்போது ஒரு புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
6
விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் சந்திரமுகி 2 படத்தில், ராகவா லாரன்ஸின் லுக் வெளியாகி வைரலாகி வருகிறது.