Celebrities Birthday : இவர்கள் மூவரும் ஒரே நாளில்தான் பிறந்தார்களா?
ஏப்ரல் மாதத்தில் படத்தில் சிறிய கதாபாத்திரம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் டேனியல் பாலாஜி. அதன் பிறகு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை என பல ஹிட் படங்களில் நடித்திருந்தார்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் 49 வது பிறந்தநாள் இன்று.
கன்னட சினிமாவில் (Thaayavvu) படத்தின் மூலம் அறிமுகமாகி இந்திய சினிமாவை கலக்கி வருபவர் கிச்சா சுதீப்.
இவர் கன்னட படங்கள் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிப்படங்களில் நடித்து வருகிறார். இன்று கிச்சா சுதீப் 51 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
தெலுங்கு சினிமாவில் உச்சபட்ச நட்சத்திரமாக வலம் வருபவர் பவன் கல்யாண். இவர் தெலுங்கில் 31 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
மேலும் இவர் நடிப்பில் உருவாகிவரும் OG படம் இந்த மாதம் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. இன்று பவன் கல்யாணின் 56 வது பிறந்தநாள் ஆகும்