Captain Miller First Look: வந்தாச்சு கேப்டன் மில்லர்..வெளியானது கேப்டன் மில்லரின் வெறித்தனமான ஃபர்ஸ்ட் லுக்!
வாத்தி படத்தில் நடித்ததை அடுத்து சாணிக்காயிதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் அடுத்ததாக நடித்து வரும் திரைப்படம் கேப்டன் மில்லர்.
சத்ய ஜோதி பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கும் நிலையில், பிரியங்கா அருள் மோகன் இப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாகலாம் எனக் கூறப்பட்டு வரும் நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டை எதிர்பார்த்து தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
முன்னதாக நடிகர் தனுஷூம் இந்த அறிவிப்பு குறித்து ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் தான், கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனால், தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
இதற்கு முன்னதாக இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது. கடைசியாக வெளியான வாத்தி திரைப்படம் பெரிய வெற்றி பெறாததை தொடர்ந்து, கேப்டன் மில்லர் படத்தை தனுஷ் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
நடிகர் தனுஷ் அடுத்ததாக சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள படத்தில் நடிக்க உள்ளார்.இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திடம் பேச்சுவார்த்தை நடப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.