Ilayaraja and Maniratnam movies : ’ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா..’ பிறந்தநாள் நாயகர்கள் மணிரத்னம் மற்றும் இளையராஜா கூட்டணியில் உருவான படங்கள்!
இந்திய திரையுலகில் மணிரத்னம், இளையராஜா ஆகிய இருவருமே உச்சநட்சத்திரங்கள். இன்று இளையராஜா தனது 80 ஆவது பிறந்தநாளையும் மணிரத்னம் தனது 68 ஆவது பிறந்தநாளையும் கொண்டாடுகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவர் கூட்டணியில் உருவான திரைப்படங்களின் பட்டியலை பார்ப்போம்..
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமௌன ராகம் (1986) - இப்படத்தில் இடம் பெற்றிருந்த ’நிலாவே வா’ இன்றளவும் பசுமை நிறைந்து இருக்கிறது.
நாயகன் (1987) - ‘நீ ஒரு காதல் சங்கீதம்’ இன்றளவும் நம் காதுகளில் காதல் கீதமாக ஒலித்து கொண்டுத்தான் இருக்கிறது.
அக்னி நட்சத்திரம் (1988) - ’ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா’ உட்பட இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடலுமே சுப்பர் ஹிட் அடித்தது.
அஞ்சலி (1990) - ’அஞ்சலி..அஞ்சலி..அஞ்சலி..’ இளமை ததும்பும் இசை நிறைந்த திரைப்படம் அஞ்சலி.
தளபதி (1991) - ‘சுந்தரி கண்ணால் ஒரு செய்தி..’ இப்படப் பாடல்களுக்கு மயங்காத மனம் தான் உண்டோ?..
- - - - - - - - - Advertisement - - - - - - - - -