Indraja shankar : ‘தந்தன தந்தன தை மாசம்..’ திருமணத்திற்கு ஓகே சொன்ன ரோபோ ஷங்கரின் மகள்!
விஜய் டிவியின் ’கலக்கப்போவது யாரு’ தொடரில் தன் பயணத்தைத் தொடங்கிய ரோபோ சங்கர், நடிகர் கமல், விஜயகாந்த், கார்த்திக் என பல நடிகர்களை அப்படியே பிரதிபலித்து மக்களின் உள்ளங்களைக் கவர்ந்து பிரபலமானார்.
அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் - நயன்தாரா நடிப்பில் வெளியான 'பிகில்' திரைப்படத்தில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா.
விருமன் படத்திலும் நடித்திருந்தார். ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான 'சர்வைவர்' நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார்.
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் இந்திரஜா சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அவர் ஒரு சிறந்த பரதநாட்டிய கலைஞரும் கூட.
கார்த்திக் என்பவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து மாமா என்ற கேப்ஷனுடன் பகிர்வார். இதனால் அவரின் ரசிகர்கள் பலருக்கும் அவர்கள் இடையே காதலா என்ற கேள்வி எழுப்பி வந்தனர்.
கார்த்திக் அதற்கு ஆமா... ஆனால் தேதி இன்னும் முடிவாகவில்லை. முடிவு செய்ததும் சொல்லறோம் அதற்கு இந்திரஜாவும் அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வரும். இந்த சந்தோஷமான செய்தியை எனது நல விரும்பிகளுடன் நிச்சயமாக பகிர்வோம் என பதிலளித்து இருந்தார்.