Tamil cinema : ஒட்டுமொத்த ஊரை ஏமாற்றிய தமிழ் சினிமாவின் காட்சிகள்!
சூர்ய வம்சம் - ஒரே பாட்டில் ஓஹோவென வளர்வது. பண ரீதியாக சிரமப்படும் சரத்குமார்-தேவயானி ஜோடி பணக்காரர்களாகும் கதையை இப்போது பார்த்தால் சிரிப்புதான் வரும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவேலையில்லா பட்டதாரி - வேலையே இல்லாத ஒரு நபரின் மீது பல் டாக்டாராக இருக்கும் பெண் காதலில் விழுவது. அதுவும் பக்கத்து வீட்டு பெண் தானாகவே வந்து பேசுவது சினிமாவில் பார்க்க நன்றாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் நடப்பது கஷ்டம்தான்
யாரடி நீ மோகினி - ஒரே நாளில் கோடிங் கற்றுக்கொண்டு மேலதிகாரியான நயன்தாராவை கவரும் தனுஷ்.
திருச்சிற்றம்பலம் - ஆணுக்கு நெருக்கமாக இருக்கும் பெண் தோழி, அவருக்கு தெரியாமலே மறைமுகமாக காதல் செய்வது அடுத்தக்கட்ட ஸ்காம்.
மெளன ராகம் - ஒரு பெண்ணிடம் மீண்டும் மீண்டும் காதலை வெளிப்படுத்தினால், அவள் அதை ஏற்றுக்கொள்வால் எனும் தவறான கூற்றை ரொமாண்டிக்காக காட்டியது தவறு.
இனிது இனிது - கல்லூரி வாழ்க்கை காதல், நட்பு என சந்தோஷமாக மட்டுமே இருக்கும் என காட்டி பள்ளி மாணவர்களை ஏமாற்றியது.
வாரணம் ஆயிரம் - ரயில் பயணத்தில் ஏற்படும் காதல். நம்முடன் பயணிக்கும் நபர், திருமணமாகாத காதலர்கள் இல்லாத பெண்ணாகவோ ஆணாகவோ இருப்பது அரிதினும் அரிது. இப்படி ஒரு காதல் கதை நம் வாழ்க்கையில் நடந்து விடாத, என நம்பி ஏமாந்த இளைஞர்கள்தான் இங்கு அதிகம்.
கில்லி - அரையிறுதி போட்டியில் தோற்றுவிட்டு, இறுதிப்போட்டிக்கு சென்று வெல்வது. சூப்பர் ஹிட் படத்தின் பெரிய லாஜிக் ஓட்டை இது..
- - - - - - - - - Advertisement - - - - - - - - -