Bigg Boss Tamil 8 Eviction: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து இருந்து மூட்டையை கட்டும் போட்டியாளர் இவரா?
பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 4 போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில், தற்போது 13 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவர்களில் இந்த வாரம் யார் வெளியேற போகிறார் என்கிற எதிர்பாப்பு எழுந்துள்ளது. மேலும் மக்களின் வாக்குகள் அடிப்படையில் நெட்டிசன்கள் தொடர்ந்து தங்களின் கருத்துக்களை தெரிவிக்க துவங்கி விட்டனர்.
அந்த வகையில் இந்த வாரம், விஜய் சேதுபதி வீட்டை விட்டு வெளியே அழைத்து பேச போகும் போட்டியாளர் இவர்களில் ஒருவர் தான் யூகித்து கூறிவருகிறார்கள்.
இந்த வாரம் மக்களின் வாக்குகள் அடிப்படையில், வழக்கம் போல், முத்துக்குமரன் லீடிங்கில் உள்ளார். இவரை தொடர்ந்து, இரண்டாவது அடுத்தடுத்த இடங்களில் அருண் பிரசாத், சௌந்தர்யா, ஜெப்ரி, ஆகியோர் சேப் சோனில் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கடைசி மூன்று இடங்களில், ராணவ், ரஞ்சித், அன்ஷிதா ஆகியோர் உள்ளனர். இவர்களில் ஆஷிதா மிகவும் குறைவான வாக்குகளோடு உள்ளதால் அவர் தான் வெளியேறுவார் என எதிரிபார்க்கப்படுகிறது.
ரஞ்சித் பிரீஸ் டாஸ்க் வரை தாக்குபிடிப்பார் என எதிர்பார்பதால் அவர் வெளியேற வாய்ப்புகள் குறைவே. எனவே இந்த வாரம் பிக்பாஸ் டார்கெட் ஆஷிதா அல்லது ராணவ்வாகவே இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -