Pradeep Anthony : ‘அடுத்த வேலையா பார்ப்போம்..’ இணையத்தில் தக் லைஃப் பண்ணும் பிரதீப் ஆண்டனி!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் அருவி, வாழ், டாடா ஆகிய படங்களில் நடித்த தீவிர ரஜினியின் ரசிகரான பிரதீப் ஆண்டனி பங்குபெற்றார். முதல் நாளில் இருந்து அனைவரும் இவரை சற்று ஏளனம் செய்து வந்தனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஏதோ ஒரு சண்டை வந்த பிறகு, அதை திசை திருப்பி கூட்டமாக சேர்ந்து பிரதீப்பிற்கு ரெட் கொடுத்து வெளியே அனுப்பி வைத்தனர்.
இவரால் பெண்களுக்கு ஆபத்து என்று குற்றம் சாட்டப்பட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பிரதீப், ரெட் கார்ட்டை வைத்து தனது பெண் நண்பர்களுடன் சந்தோஷமாக கொண்டாடிவருகிறார்.
“கூட நின்னதுக்கு நன்றி. என்னால முடிஞ்ச அளவுக்கு நல்ல ஆர்டிஸ்டா ஆக ட்ரை பண்றேன்.” என்ற கேப்ஷனுடன் வடிவேலு காமெடியை ஷேர் செய்துள்ளார்.
பிரதீப்பின் நண்பர் கவின், “உன்னை பற்றி தெரிந்த மக்களுக்கு கண்டிப்பாக உன்னை பற்றி தெரியும்.” என ஆதரவாக ட்வீட் செய்துள்ளார். முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்களும் பிரதீப்பிற்கு செய்யப்பட்டது அநியாயம் என்று குரல் கொடுத்து வருகின்றனர்.
இன்று வந்த முதல் ப்ரோமோவிலும், குருப்பீஸம் செய்துதான் நேற்று ரெட் கார்ட் எவிக்ஷன் செய்தீர்கள் என பிக்பாஸ் கூறினார். அத்துடன், விச்சித்ரா, வி.ஜே.அர்ச்சனாவும் இந்த விஷயத்திற்கு குரல் கொடுத்தனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -