Bigg Boss 7 Tamil : எவிக்ட் ஆன பின்னரும் கண்டெண்ட் கொடுக்கும் பிரதீப்..சுடு பிடித்த பிக் பாஸ் நிகழ்ச்சி!
பிரதீப் ஆண்ட்னி தகாத வார்த்தைகளை பேசுகிறார், அச்சுறுத்தலாக இருக்கிறது, பெண்களுக்கு ஆபத்து என அடுக்கடுக்காக அவரின் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதனால் ரெட் கார்ட் கொடுத்து அவரை வெளியேற்றினர். இந்நிகழ்வை தொடர்ந்து, இன்று வந்த மூன்று ப்ரோமோக்களிலும் பிக்பாஸ் வீடு சண்டையால் பற்றி எரிகிறது என்பது தெரிகிறது.
பிரதீப் வெளியேற்றப்பட்டது ஒரு கூட்டு சதி, மற்றவர்களும் தப்பு செய்துள்ள நிலையில் ஏன் பிரதீப்பை மட்டும் டார்கெட் செய்தனர் போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.
வைல்ட் கார்ட்டில் உள்ளே வந்த தினேஷ், விஜே அர்ச்சனாவுடன் விசித்திராவும் சேர்ந்து இந்த பிரச்சினைக்காக குரல் கொடுத்து வர, வீட்டில் இருக்கும் மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ஐஸ்வர்யா, நிக்சன் ஆகியோர் ஒன்று சேர்ந்து பிக் பாஸ் வீட்டில் ரணகளம் செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் பலரும் பிரதீப் மீண்டும் உள்ளே வர வேண்டும் என்றும் நியாயமாக பேசும் தினேஷ், அர்ச்சனா, விசித்திரா ஆகியோர் மாஸ் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அவர்களுடன் சண்டை போடும் மற்ற போட்டியாளர்களை திட்டி தீர்த்து வருகின்றனர். சரியாக தீர்பு வழங்கி வரும் கமலுக்கு என்னாச்சு?, ஏன் அவர் இப்படி செய்தார் என்று தங்கள் கண்டனத்தை பிக்பாஸ் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -