Bigg Boss Pavni : ‘அந்த 15 நாட்கள் ரொம்ப கஷ்டமா இருந்தது..’ மருத்துவமனையில் பிக்பாஸ் புகழ் பாவ்னி!
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்குபெற்று அதன் இரண்டாவது ரன்னர் அப்பாக அறிவிக்கப்பட்டவர் பாவ்னி. தனது சக போட்டியாளரான அமீருக்கும் இவருக்கு இந்த நிகழ்ச்சியில் காதல் மலர்ந்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுன்னதாக பல நாடகங்களிலும் படங்களிலும் இவர் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரே பிரபலமானார். கடந்த பொங்கலுக்கு வெளியான துணிவு படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில் பாவ்னிக்கு நீண்ட நாட்களாக கழுத்து வழி இருந்து வந்தது. அதனால் எலும்பியல் நிபுணரிடம் ஆலோசனை பெற்றுள்ளார். தினமும் பிசியோதெரபி செய்து வந்துள்ளார்.
வலியுடன் படப்பிடிப்பில் நடித்து வந்துள்ளார். வலி தாங்க முடியாமல் எண்டோஸ்கோபிக் டிஸ்கெக்டமி அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார் பாவ்னி.
அறுவை சிகிச்சை முடிந்ததும் 15 நாட்கள் ஓய்வு எடுத்த பாவ்னி, தனது இன்ஸ்டா பக்கத்தில் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.
தனக்கு உறுதுணையாக இருந்த அவரின் காதலரான அமீருக்கும், அவரது நண்பர்களுக்கும், மருத்துவர்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -