Ayalaan in OTT : ஓடிடியில் வெளியாக தயாரான அயலான்! விவரம் உள்ளே...
ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளியான திரைப்படம் 'அயலான்'.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதனுஷின் 'கேப்டன் மில்லர்' மற்றும் அருண் விஜய்யின் 'மிஷன் சாப்டர் 1' படத்துடன் நேரடியாக களத்தில் மோதியது சிவகார்த்திகேயனின் 'அயலான்' திரைப்படம்.
ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், ஈஷா கோபிகர் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.
ஏலியன்ஸ் கதையை மையமாக வைத்து வெளியான அயலான் திரைப்படம் 75 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தின் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இருந்தது என ரசிகர்கள் பாராட்டினார்.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் அயலான் திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 9ம் தேதி முதல் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் அயலான் திரைப்படம் வெளியாக உள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -