Tamil Movies : நான் மகான் அல்ல முதல் தலைவா படம் வரை.. இன்று வெளியாகி இருந்த தமிழ் படங்கள்!
கே நடராஜ் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த படம் வள்ளி. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ரஜினிகாந்த் எழுதி இருந்தார்
வள்ளி படத்தை ரஜினிகாந்த், ரஜினி ஆர்ட்ஸ் என்ற சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் தயாரித்து இருந்தார். இப்படம் வெளியாகி இன்றுடன் 31 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
சுசீந்திரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளிவந்த படம் நான் மஹான் அல்ல. இப்படம் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
வில்லன் கும்பல் ஒரு காதல் ஜோடியை கொலை செய்து விடுகின்றனர். அந்த கும்பலை கார்த்தி அப்பா பார்த்துவிடுகிறார். இதை அறிந்த வில்லன் கும்பல் கார்த்தி அப்பாவை கொலை செய்ய திட்டமிடுகின்றனர். இதன்பிறகு கார்த்தி அப்பாவை காப்பாற்றினாரா? வில்லனிடம் இருந்து தப்பித்தாரா? என்பதே மீத கதை.
கே வி குகன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த படம் இனிது இனிது. இப்படத்தில் எட்டு புதிய அறிமுக நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இப்படம் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 2007 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த ஹாப்பி டேஸ் படத்தின் தமிழ் ரீமேக்தான் இது.
ஏ எல் விஜய் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்து வந்த படம் தலைவா. இப்படம் தமிழ் நாட்டில் மட்டும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அன்று வெளியாகி இருந்தது.
இப்படத்தில் அமலா பால், சத்யராஜ், சந்தானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் வெளியாகி இன்றுடன் 11 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.