Atharva Murali : சாக்லேட் பாய் அதர்வா முரளிக்கு இன்று பிறந்த நாள்!
பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா முரளி.
பரதேசி, இமைக்கா நொடிகள், சண்டி வீரன், ஈட்டி, போன்ற படங்களில் நடித்து அசத்தினார். மணிகண்டன்- அதர்வா கூட்டணியில் சென்ற ஆண்டு ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸாக மத்தகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
அதர்வா கிக்ஆஸ் எண்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ளார். தமிழில் பல படங்களில் நடித்து வந்த அதர்வா, 2019 ஆம் ஆண்டு கடலகொண்ட கணேஷ் என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்
அதர்வா தற்போது, ஒருநாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசனுடன் கைகோர்த்து DNA என்ற படத்தில் நடித்து வருகிறார்.
டாடா படத்தை தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் தான் DNA படத்தையும் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நிமிஷா விஜயன், ரமேஷ் திலக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இன்று அதர்வாவின் பிறந்த நாளை முன்னிட்டு DNA படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது