Ashok Selvan - Keerthi Pandian : ரொமான்டிக்காக கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் சொன்ன கீர்த்தி - அசோக் செல்வன்!
2023ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட கோலிவுட் ஜோடிகளில் ஒருவர் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன்
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை அவர்களின் அழகான ரொமான்டிக் புகைப்படங்களுடன் தெரிவித்துள்ளனர்
அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமண தகவல் வெளியானதில் இருந்தே ஏராளமான விமர்சனங்கள் எழுந்தாலும் அதற்கு எல்லாம் தகுந்த பதிலடியை மிகவும் கண்ணியமாக தெரிவித்து வருகிறார்கள்
அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் இருவருமே அவரவர்களின் படங்களில் பிஸியாக இருப்பதால் இருவரும் சேர்ந்து இருக்கும் நேரம் மிகவும் குறைவு தான். இருந்தாலும் அவர்கள் ஒன்றாக இருக்கும் நேரத்தை ரொமான்டிக்காக செலவு செய்கிறார்கள்.
அசோக் செல்வனின் 'சபாநாயகன்' மற்றும் கீர்த்தி பாண்டியனின் 'கண்ணகி' திரைப்படமும் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது
இவர்கள் இருவரும் இணைந்து ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.