Demonte Colony 2 : ‘இருள் ஆளப்போகிறது’.. டிமான்டி காலனி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
கடந்த 2015 ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து - அருள்நிதி கூட்டணியில் வெளியாகி மாபெரும் வரவேற்பை திரைப்படம் டிமான்டி காலனி.
இப்படத்தின் வெற்றியை அடுத்து இதன் இரண்டாம் பாகமும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் இப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் இயக்குநர் அஜய் ஞானமுத்து.
டிமான்டி காலனி 2 திரைப்படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், மீனாக்ஷி கோவிந்தராஜன் உள்ளிட்டோர் நடிப்பதாக கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியானது.
அதை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு ஓசூர், சென்னை மற்றும் ஆந்திர மாநில எல்லை பகுதிகளில் பரபரப்பாக நடந்து வந்தது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து விட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோப்ரா திரைப்படத்திற்கு பிறகு அஜய் ஞானமுத்து, டிமான்டி காலனி 2 திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.