Demonte Colony 2 : வெளியாகிறது டிமாண்டி காலனி 2வின் ட்ரைலர்..அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு..!
தமிழ் சினிமாவில் பேய் கதைகள் எல்லாம் காமெடி படமாக மாறி போன நிலையில், பார்ப்போரை வியர்க்க வைத்த ஒரு த்ரில்லர் படம் தான் டிமான்ட்டி காலனி.
2015ம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளிவந்த இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வெள்ளைக்காரன் காலத்து ஃப்ளாஷ்பேக் கொண்டு, ஒரு வீட்டுக்குள் மாட்டிக் கொள்ளும் நண்பர்கள் ஒவ்வொருவராக கொல்லப்படும் காட்சிகள், பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைத்தது.
இந்த அளவுக்கு திகிலை கிளக்கிய டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
டிமான்டி காலனி2 படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி. எஸ். இசை அமைத்துள்ளா. ஹாரர் திரில்லர் ஜானரில் உருவான இந்த படத்தை ஒயிட் லைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஞானமுத்து பட்டறை சார்பில் தயாரிக்கப்படுகிறது.
டிமான்ட்டி காலனி படத்தின் சம்பவங்களுக்கு முன்பு நடந்த கதையும், அப்படத்தின் முடிவுக்கு பிறகு நடக்கும் சம்பவங்களும் சேர்த்து, இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு கூறியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வரும் டிசம்பர் 16ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.