Art Director Milan : கலை இயக்குநர் மிலன் அஜித்துடன் இவ்வளவு படங்களில் பணியாற்றியுள்ளாரா?
கலகத் தலைவன் படத்திற்கு பிறகு இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் திரைப்படத்தின் ஷூட் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தின் கலை இயக்குநர் திடீர் மாரடைப்பால் நேற்று காலமானார்
கலாப காதலன் திரைப்படத்தின் மூலம் கலை இயக்குநராக அறிமுகமான மிலன், அஜித் நடிப்பில் வெளியான பில்லா ,வேதாளம் ,வீரம் மற்றும் விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் திரைப்படத்திலும் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
அஜித் குமாரின் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் பணிக்காக அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றுள்ள படக்குழு மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று படத்தின் கலை இயக்குனர் மிலன் மாரடைப்பால் அவதிப்பட்டததையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மிலனை பரிசோதித்த மருத்துவர்கள் மிலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சியடைந்த படக்குழு ஷூட்டிங் பணிகளை நிறுத்திவிட்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். கலை இயக்குநர் மிலனின் உடல் இந்தியா வருவதற்கு படக்குழு முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.